உள்நாடு

சீனன்கோட்டை ஷாதுலிய்யா தரீக்கா கலீபாவுக்கு நியமனக் கடிதம், சின்னம் வழங்கி வைப்பு.

ஷாதுலி நாயகம் அல் குத் புல் அக்பர் இமாம் அபுல் ஹஸன் அலியுஷ்ஷாதுலி (ரலி) அவர்களின் 850 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில் 133 வது வருட மனாகிப் தமாம் கந்தூரி மஜ்லிஸ் 25/5/2024 இரவு கலீபதுல் குலபா மௌலவி அல் உஸ்தாத் எம்.இஸட்.முஹம்மத் ஸுஹுர் (பாரி) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.சீனன்கோட்டை பகுதிக்கான சாதுலிய்யாத் தரீக்காவின் புதிய கலீபாவாக அத்தரிக்காவின் உலக ஆன்மீகத் தலைவர் செய்கு ஸஜ்ஜாதா அஷ் செய்ஹ் மஹ்தி அப்துல்லாஹ் அல்பாஸி அல் மக்கி அஷ் மக்கி அஷ்ஷாதுலி அவர்களினால் நியமிக்கப்பட்ட அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளருமான அஷ் செய்ஹ் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி)க்கான நியமனக் கடிதம் இதன் போது கையளிக்கப்பட்டது.

பள்ளிச்சங்கமும் ஜாமியத்துல் பாஸியதுஷ்ஷாதுலியா கலாபீடமும் இணைந்து அன்னாருக்கு இணை நினைவுச் சின்னமொன்றையும் வழங்கியது.

கலீபதுல் குலபா,பள்ளிச் சங்க தலைவர் ஏ.எச்.எம்.முக்தார் ஹாஜியார்,இணைச் செயலாளர் எம்.எம்.எம்.சிஹாப் ஹாஜியார்,ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலியா கலாபீட நிர்வாக சபை தலைவர் சட்டத்தரணி அல்-ஹாஜ் எம்.ஸி.எம்.ஹம்ஸா ஆகியோரினால் நினைவு சின்னம் கையெழுக்கப்பட்டது.

அத்தோடு புதிதாக கலீபாக்களாக நியமிக்கப்பட்ட மௌலவி முஹம்மத் பாரூக் (மக்கி) பேருவளை,மௌலவி எம்.ஜே.எம்.பஸ்லான் (அஷ்ரபி) பேருவளை-மருதானை,மௌலவி முஹம்மத் ரஸூக் (பஹ்ஜி) காலி ஆகியோரும் பொன்னாடை போத்தி கௌரவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சீனன்கோட்டை பள்ளிச் சங்க உறுப்பினர்கள்,ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீட உறுப்பினர்கள்,பலஸ்தீன நாட்டிற்கான முன்னாள் தூதுவர் அல்-ஹாஜ் எம்.பௌஸான் அன்வர்,மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் அல்-ஹாஜ் அதாவுல்லாஹ் அபூபக்கர்,கலீபாக்கலான மௌலவி எம்.எம்.ஸெய்னுலாப்தீன் (பஹ்ஜி),எம்.ஐ.எம்.ரபீக் (பஹ்ஜி),எம்.பிஷ்ர் அஜ்வாத் (பஹ்ஜி) மற்றும் ரயீஸுல் முஹம்மத் மௌலவி எம். இக்ராம் (பாஸி) ஜாமியத்துலீ பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீட முதல்வர் மௌலவி எம்.அஸ்மிகான் (முஅய்யிதி) உட்பட கலீபாக்கள்,உலமாக்கள்,முகத்தமீன்கள் பெருமளவிலான இஹ்வான்கள் பங்குபற்றினர்.பலஸ்தீன காஸா மக்களுக்காக விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.


(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *