விளையாட்டு

புதிய சீருடையை அறிமுகம் செய்தது ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகம்..!

கிழக்கு மண்ணில் காற்பந்தாட்ட ஜாம்பவான்களில் ஒன்றான ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வும் அக்கறைப்பற்று ஹிஜ்ரா அணியுடனான சிநேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டியும் ஏறாவூர் டாக்டர் அஹமட் பரீட் விளையாட்டு அரங்கில் கழகத்தின் செயலாளர் ஏ.எம்.றிஸ்வி(yso) தலைமையில் 26/05/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பிரபல தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமான எம்.ஆர்.நஸீர்(ரஜாய்) கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதியாக இசெட் பௌவுன்டேசன் அமைப்பின் தலைவர்.கே.வாஜித் கலந்து கொண்டிருந்தார்.

இடம்பெற்ற சிநேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டியில் 1.0 எனும் கோல் முன்னனியில் ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகம் அக்கரைப்பற்று ஹிஜ்ரா விளையாட்டு கழகத்தை வெற்றி கொண்டது.

கழகத்தின் நட்சத்திர வீரர் எம்.என்.எம்.அப்றாஸ் அவர்களின் முழுமையான நிதி பங்களிப்பில் புதிய சீருடை வழங்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

 

(உமர் அறபாத் -ஏறாவூர்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *