உள்நாடு

சீனன்கோட்டை கிரவுன் ஆங்கில பாடசாலை, மத்றஸா மாணவர்களின் கைப்பணிக் கண்காட்சி.

பேருவளை சீனன் கோட்டை கிரவுன் ஆங்கிலப் பாடசாலை மற்றும் கிரவுன் குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் கைப்பனி கண்காட்சி மேற்படி பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலை முகாமைத்துவப் பணிப்பாளர் ஹிசாம் கரீம் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி அங்குரார்ப் பண நிகழ்வில் இலங்கை-சீனா நட்புறவு கலாச்சார நட்புறவுச் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் (பெண்கள் பிரிவு) அரோசா பக்தி சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேற்படி சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் அல்-ஹாஜ் எம்.இபாம் ஹனபி,சமூக சேவையாளர் இஸ்மத் ராஸிக் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் பங்குபற்றினர்.

கிரவுன் ஆங்கிலப் பாடசாலை மற்றும் குர்ஆன் மத்ரஸாவில் கல்வி பயிலும் சுமார் 300 சிறார்கள் அன்றாட கல்வி பொருட்களை கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டி கைப்பணிக் கண்காட்சியை அழகு படுத்தியிருந்தனர்.

வீடுகளில் அன்றாடம் அகற்றப்படும் பிளாஸ்றிக்,காட்போட்,பொலித்தீன்,இரும்பு உட்பட பல கழிவுப் பொருட்களை சிறந்த முறையில் பயன்படுத்தியுள்ளமை விசேட அம்சமாகும். அதிதிகள் ஒவ்வொரு கண்காட்சி கூட்டத்திற்கும் சென்று பார்வையிட்டதோடு சிறார்களின் ஆற்றல்களையும் பாராட்டினர்.

சிறர்களிடம் பல்வேறு திறமைகள் உண்டு. அவர்களை ஊக்கப்படுத்தி பாராட்டுவதன் மூலம் மேலும் அவர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டுவார் என பிரதம அதிதி குறிப்பிட்டார்.

இலங்கை-சீனா நட்புறவு கலாசார சங்கத்தின் மூலம் இந்த சிறார்களின் திறமைகளை வெளிக்காட்ட வேண்டி முடியுமான உதவி ஒத்தாசைகளை எதிர்காலத்தில் பெற்றுத் தர முயற்சி செய்வதாக சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அல்-ஹாஜ் இபாம் ஹனபி தெரிவித்தார்.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *