முர்ஷித் கல்குடா – ஈரான் ஜனாதிபதிக்கு மீராவோடையில் கத்தமுல் நினைவு உரை..!
கடந்த 19.05.2024 அன்று அசர்பைஜான் எல்லையில் ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் நாட்டு ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் காலநிதி ஹீசைன் அமீர் அப்துல்லாஹியான் உள்ளிட்ட எட்டு உயர் அதிகாரிகளின் திடீர் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு மீராவோடை மன்ப உல் ஹூதா அரபுக் கல்லூரியில் நேற்று இரவு இடம் பெற்றது.
அரபுக் கல்லூரி அதிபர் மௌலவி ஏ.பி.மர்வான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மரணித்தவர்களின் மண்ணறை வாழ்வுக்காக கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு விஷேட துஆ பிராத்தனையும் இரங்கள் உரையும் நிகழ்த்தப்பட்டது.
கல்லூரியின் இஸ்த்தாபகர் மௌலவி எல்.ரி.எம்.இஸ்ஹாக் இரங்கல் உரையினையும் விஸேட துஆ பிராத்தனையையம் நடாத்தினார்.
இதேவேளை துக்க தினத்தை அனுஸ்டிக்கும் முகமாக ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய இடங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டும் உயிர் நீத்தவர்களின் உருவப் படங்கள் தாங்கிய பெனர்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை காணக் கூடியாகவுள்ளது.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)