5ஆவது லங்கன் பிரீமியர் லீக்கின் தூதுவரான மைக்கல் கிளார்க்.
5ஆவது லங்கா பிரீமியர் லீக் ரி20 தொடரின் உத்தியோகபூர்வ விளம்பரத்தூதுவராக அவுஸ்திரேலிய அணியின் முன்னால் அணித்தலைவரான மைகல் க்ளார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
லங்கன் பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது அத்தியாயம் எதிர்வரும் ஜுலை மாதம் 1ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் அதற்கதன வீரர்கள் ஏலம் கடந்த 21ஆம் திகதி நிறைவுக்கு வந்திருந்தது. அதற்கமைய நடப்பாண்டிற்கான தொடரில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலுமுள்ள நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் 5 அணிகளுக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் 5ஆவது லங்கன் பிரிமியர் லீக் தொடரின் தூதுவரான அவுஸ்திரேலிய அணியின் முன்னால் தலைவரான மைக்கல் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் லங்கன் பிரீமிர் லீக் தொடரின் அமைப்பாளர் குறிப்பிடுகையில் ”உலக கரிக்கெட்டில் பெயர்போன கிளார்க் லங்கன் பிரீமியர் லீக் தொடருக்கு அனுபவச் செல்வத்தைக் கொண்டு வருகிறார்.
அவர் ஒரு வலது கை துடுப்பாட்ட வீரர், அவரது நேர்த்தி மற்றும் திறமைக்கு பெயர் பெற்றவர், அவர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர். அவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச வடிவங்களில் தேசிய அணிக்கு அணித்தலைவரான இருந்தவர், மேலும் மிக முக்கியமாக 2015 ஆண்டு இடம்பெற்ற ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணி சம்பியன் கிண்ணம் வெல்லஅணியை வழிநடாத்தியவர்.என்றார்.
மேலும் தனக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பு பற்றி மைக்கல் கிளார்க் இவ்வாறு குறிப்பிட்டார். ”நான் விளையாட விரும்பும் நாடான இலங்கைக்கு திரும்புவதற்கு என்னால் காத்திருக்க முடியாது. இம்முறை வெறும் போட்டிவர்ணனை செய்ய மட்டும் அல்ல நான் இலங்கைக்கு வருவது. லங்கன் பிரீமியர் லிக் இன் தூதராகவும் இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
இன்னும் என்னால் காத்திருக்க முடியாது. நிறைய திறமைகள், பல இளம் வீரர்கள் மற்றும் நிறைய சிறந்த வெளிநாட்டு வீரர்கள் இம்முறை பங்கேற்கவுள்ளனர். அதனால் இத் தொடர் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமில்லை.” என்றார்.
(அரபாத் பஹர்தீன்)