17ஆவது ஐ.பி.எல் தொடர். சன்ரைசர்ஸை மண்டியிட வைத்து 3ஆவது முறையாக மகுடம் சூடிய கல்கத்தா நைட்ரைடர்ஸ்.
17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் தீர்மதனமிக்க இறுதிப் போட்டியில் பெட்கமின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை 8 விக்கெட்க்களால் மிக இலகுவாக வீழ்த்திய ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நடப்பாண்டின் சம்பியன் மகுத்தை வெற்றி கெர்ணடதுடன் 3ஆவது முறையாகவும் ஐ.பி.எல் கிண்ணத்தை தனதாக்கி அசத்தியது.
கிரிக்கெட்பிரீமியர் லீக் தொடர்களைப் பொருத்தமட்டில் அதிக பணம் புரழும் தொடர் மட்டுமல்லாது மிக அதிகமான ரசிகர்களையும் தன்னகத்தே கொண்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடர்லீக் சுற்று மற்றும் குவாளிபயர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நிறைவுக்கு வந்திருக்க இன்றைய தினம் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று சென்னை சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற.
லீக் ஆட்டம் மற்றும் குவாலிபயர் போட்டிகளில் எதிரணியை திணறடிக்கச் செய்து முதல் அணியாய் இடம்பிடித்த கல்கத்தா அணியை முன்னவரிசை அதிரடியால் பல முன்னனி பந்துவீச்சாளர்களை துவம்ஷம் செய்த சன்ரைசர்ஸ் அணி எதிர்த்தாடுகின்றது. மேலும் லீக் ஆட்டங்களின் முடிவில் இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்துக் கொண்டதுடன் முதல் குவாளிபயர் போட்டியிலும் மோதியிருந்ததுன. இருப்பினும் அப் போட்டியில் கல்கத்தா அணி இலகு வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரு முறை சம்பியன் பட்டம் வென்றுள்ள கல்கத்தா அணி 3ஆவது சம்பியன் மகுடத்தை கைப்பற்றும் முனைப்புடன் களம் நுழையஇ ஒரு சம்பியன் மகுடத்தை வெற்றி கொண்டுள்ள சன்ரைசர்ஸ் அணி 2ஆவது மகுட வேட்டைக்குத் தயாராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணியின் தலைவரான பெட் கமின்ஸ் முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.
இதற்கமைய களம் நுழைந்த சன்ரைசர்ஸ் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான அபிஷேக் சர்மா (2) மற்றும் ஹெட் (0) ஆகியோரை முதல் இரு ஓவர்களில் இழந்து ஆட்டம் கண்டது. இருப்பினும் மத்திய வரிசையில் அணியை மீட்பார்கள் என நம்பப்பட்ட திருப்பாத்தி (9), மெக்ராம் (20), நிட்டிஸ் ரெட்டி (13), க்ளாசன் (16), சமத் (4), சபாஷ் அஹமட் (8) என நிலைக்காமல் பெவிலியன் திரும்பினர்.
இறுதியில் வந்த பெட் கமின்ஸ் தன் பங்கிற்கு 24 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்து இறுதி விக்கெட்டாக வெளியேற சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் ரஸல் 3 விக்கெட்டுக்களையும்,ஸ்டார்க் மற்றும் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பின்னர் சம்பியன் மகுடத்தை தனதாக்க 114 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் நுழைந்த கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஆரம்ப வீரர்களான குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களம் நுழைந்தனர். தான் எதிர்கொண்ட முதல் பந்திலே ஆறு ஓட்டத்தை விளாசிய நரைன் கமின்ஸின் அடுத்த பந்திலே பிடி கொடுத்து வெளியேறினார். இருப்பினும் 2ஆவது விக்கெட்டில் இணைந்த குர்பாஸ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களை வெளுத்துத் தள்ளியது.
இந்த ஜோடி தமக்கிடையில் 91 ஓட்டங்களை பகிர்ந்திருக்க குர்பாஸ் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இருப்பினும் களத்திலிருந்தவெங்கடேஷ் ஐயர் அரைச்சதம் கடந்து 52 ஓட்டங்களுடன் நிலைத்திருக்க, அணித்தலைவர் ஸ்ரேயர்ஸ் ஐயர் தன் பங்கிற்கு 6 ஓட்டங்களுடன் களத்திலிருக்க கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி பெற்றதுடன் நடப்பாண்டின் சம்பியன் மகுடத்தையும் தனதாக்கி அசத்தியதுடன் ஐ.பி.எல் சரலாற்றில் 3ஆவது சம்பியன் மகுடத்தையும் தனதாக்கி அசத்தியது.
(அரபாத் பஹர்தீன்)