உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், பொலிஸ் மா அதிபருக்கு நன்றி தெரிவிப்பு..!

கல்முனை மாநகரில் நீண்டகால பிரச்சனையாக இருந்த ஒரு வழிப்பாதையை இரு வழிப்பாதையாக மாற்ற தன்னுடைய கோரிக்கைக்கு இணங்க நடவடிக்கை எடுத்த பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோனுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நன்றிகள் தெரிவித்துள்ளார்.
வர்த்தகர்களின் நீண்டநாள் பிரச்சினையாக
இருந்து வந்த ஒரு வழிப்பாதையை இரு வழிப்பாதையாக நாளை முதல் மாற்றியமைக்க அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம அவர்களின் பங்குப்பற்றலுடன் கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் கரிசனை செலுத்திய கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல். புத்திக, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.ரம்சீன் பக்கீர், வீதி அபிவிருத்தி அதிகார சபை கிழக்கு மாகாண பணிப்பாளர் எம்.அலியார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான பொறியியலாளர் இசட். ஏ. அஸ்மீர் உட்பட வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகாத்தர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் தனது கவனத்திற்கு கொண்டு வந்த பிரபல வர்த்தகர் எஸ்.எம். றிப்னாஸ் தலைமையிலான வர்த்தர்களான எஸ்.எம்.எம். அப்சார், எம்.எச்.எம். முபாரிக், வை.வி. சியாம், எஸ்.எம். ஜின்னா, எம்.வை.எம். பஸ்மீர், ஏ.எம்.அஸ்ஜா, எம்.எச்.எம். தஸ்லிம், ஏ.எம்.சஜாத் போன்றவர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *