புத்தளம் மாவட்டச் செயலாளரின் விஷேட அறிவிப்பு…!
புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் காணப்படும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பெரிய மரங்களை வெட்டி அகற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் , வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக அறிவித்துள்ளார்.
மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலையினால் புத்தளம் மாவட்டத்தில் மரங்கள் முறிந்து விழும் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், அதனை தடுக்கும் வகையில் இந்த அறிவுறுத்தல்களை அவர் வழங்கியுள்ளார். இதுதொடர்பில் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டுவருமாறும் அவர் கேட்டுள்ளார்.
இவ்வாறு பாரிய மரங்களை வெட்டி அகற்றுவதற்கு தேவையான நிதியை மாவட்ட செயலகம் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த புத்தளம் மாவட்டச் செயலாளர், அதுதொடர்பில் குறித்த மரங்களை அகற்ற தேவையான மதிப்பீட்டு அறிக்கையை பிரதேச செயலாளரிடம் கையளிக்குமாறும் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் மேலும் கூறினார்.
(ரஸீன் ரஸ்மின்)