“துணிச்சல் மிக்க ஒரு தலைவரை உலகம் இழந்துள்ளது” என நினைவு பதிவு புத்தகத்தில் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் குறிப்பிட்டுள்ளார்.
“துணிச்சல் மிக்க ஒரு தலைவரை உலகம் இழந்துள்ளது” என இலங்கை – ஈரான் தூதரகத்தின் நினைவு பதிவு புத்தகத்தில் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்றாஹிம் ரைசி ஹெலிகப்டர் விபத்தில் மரணமானதையடுத்து இலங்கையில் அமைந்துள்ள ஈரான் தூதுவரலாயத்திற்கு அரசியல், மத, சமூக துறைசார் முக்கிய பிரதி நிதிகள் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அனுதாப ஏட்டில் தமது கவலையினை ஈரான் அரசுக்கும்,நாட்டு மக்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொழும்பு 07 இல் அமைந்துள் ஈரான் தூதுவராலயத்துக்கு சென்ற அமேசன் கல்வி நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளரும், சமூக சேவையாளருமான கலாநிதி இல்ஹாம் மரைக்கார் அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மர்ஹூம் இப்றாஹிம் ரைசியின் துணிச்சலான தீர்மானங்கள் தொடர்பில் தமது பதிவினை தொடர்ந்து பதிவிட்ட கலாநிதி இல்ஹாம் மரைக்கார், அவரது சுவன வாழ்வுக்காக பிரார்த்திப்பதுடன், ஈரானின் பதில் ஜனாதிபதியாக நியமனம் பெற்றுள்ள கலாநிதி மொஹம்மட் மெதக்பர் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், ஈரான் நாட்டு மக்களும் அரசாங்கமும் தற்போது எதிர் கொண்டுள்ள கவலையான தருணத்தில் இலங்கையர்களும் இணைந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது இலங்கைக்கான ஈரான் நாட்டின் துாதுவர் டாக்டர்.அலி ரீசா டெல்கோஷ் அவர்களை சந்தித்து தமது கவலையினையும் வெளியிட்டார்.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)