விளையாட்டு

ஜேர்மனியில் யுபுன் அபேயகோனுக்கு முதலிடம்.

ஜேர்மனியில் நேற்று (24) நடைபெற்ற அன்ஹால்ட் தடகள சம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் குறுநடதூர ஓட்டப் போட்டியில் இலங்கையின் யுபுன் அபேகோன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

நடப்பாண்டின் அன்ஹால்ட் தடகளப் போட்டிகள் ஜேர்மனியில் இடம்பெற்றுவரும் நிலையில் ஆண்களுக்கான 100 மீற்றர் குறுந்தூர ஓட்டப் போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றிருந்;தது. இதில் முதல் தகுதிகாண் சுற்றில் பங்கேற்ற இலங்கையின் யுபுன் அபேகோன் போட்டித் தூரத்தை 10.15 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் பெற்று இறுதிச் சுற்றுக்கு நேரடித் தகுதி பெற்றார். அத்துடன் யுபுன் அபேயக்கோனின் சிறந்த நேரப் பிரதியாகவும் இது பதிவாகியது.

மேலும் பின்னர் இடம்பெற்ற இறுதி போட்டியில் போட்டித் தூரத்தை 10.16 செக்கன்களில் ஓடி நிறைவு செய்த யுபுன் அபேகோன் முதலிடத்தை தனதாக்கி அசத்தியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *