Friday, August 22, 2025
உள்நாடு

உயிர் நீத்த ரைசி பலஸ்தீன் போராளிகளுக்காக அக்கரைப்பற்று பள்ளிகளில் ஜனாஸா தொழுகை

நேற்று அக்கரைப்பற்றின் அனைத்து ஜூம்ஆ பள்ளிவாசல்களிலும் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து, மறைந்த ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதி செய்யித் இப்றாஹிம் றஈஸி மற்றும் அவரது சகாக்களுக்கும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனில் உயிர் நீத்த தியாகிகளுக்குமான ஜனாஸா தொழுகை இடம்பெற்றது.

தேசிய காங்கிரஸின் தலைவர் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த ஜனாஸா தொழுகையை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கிய அக்கரைப்பற்றின் அனைத்து ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேவேளை இலங்கையின் ஏனைய மாகாணங்களில் உள்ள பல ஊர்களிலும் உயிர்நீத்த ஈரான் ஜனாதிபதி மற்றும் பலஸ்தீன் தியாகிகளுக்குமான ஜனாஸா தொழுகையினை நடாத்த மக்கள் ஆர்வமாக வந்த போதிலும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் (ACJU) வழிகாட்டுதல் இல்லாமையால் ஜனாஸா தொழுகையினை நிறை வேற்றும் வாய்பிழந்த மக்கள், தமது உலகளாவிய இஸ்லாமிய உம்மத்திற்கான உணர்வுபூர்வமான தங்களது ஆன்மீக ஈடுபட்டை வெளிப்படுத்த முடியாமல் போனமை கவலை அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *