விளையாட்டு

பட்லரின் அதிரடியால் பாகிஸ்தானை வெற்றி கொண்டது இங்கிலாந்து…!

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் இன்று (25) இடம்பெற்ற 2ஆவது போட்டியில் பட்லரின் அசத்தல் துடுப்பாட்டத்தின் உதவியுடன் 20 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகள் கொண்ட ரி20 தொரின் முதல் போட்டி மழையால் முழுமையாகக் கழுவப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் (25) 2ஆவது ரி20 போட்டி பர்மிங்ஹாம் மைதானத்தில் பகல் போட்டியாக இடம்பெற்றது. இப் போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்திருந்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடக் களம் நுழைந்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்ப வீரரான பில் சோல்ட் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். பின்னர் 2ஆவது விக்கெட்டில் இணைந்த ஜோஸ் பட்லர் மற்றும் வில் ஜக் ஜோடி அசத்தலான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 71 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பதிவு செய்திருக்க வில் ஜக் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

களத்திலிருந்த அணித்தலைவர் பட்லர் அரைச்சதம் கடந்து நிலைத்திருக்க, அடுத்துவந்த பெயஸ்டோ 21 ஓட்டங்களுடன் வெளியேற அடுத்தடுத்து வந்த இங்கிலாந்து வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேற நம்பிக்கை கொடுத்த பட்லர் 84 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்ப இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் ஷஹீன் அப்ரீடி 3விக்கெட்டுக்களையும, இமாத் வஸீம் மற்றும் ஹரிஸ் ரௌப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பின்னர் 184 என்ற சவால்மிக்க வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களம் நஐழந்த பாகிஸ்;தான் அணியின் நம்பிக்கைக்குறிய ஆரம்ப வீரரான ரிஸ்வான் ஓட்டமின்றிஆட்டமிழக்க அடுத்த ஓவரில் மற்றைய ஆரம்ப வீரரான சைம் ஐயூப் 2 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் 3ஆவது விக்கெட்டில் இணைந்த அணித்தலைவரான பாபர் அஸாம் மற்றும் பக்கர் ஸமான் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்துத் தள்ளியது. இந்த ஜோடி தமக்கிடையில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்திருக்க பாபர் அஸாம் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து வந்த வீரர்களான சதாப்கான் (3), அஸாம்கான் (11) என விரைவாக வெளியேற களத்திலிருந்து நம்பிக்கை கொடுத்த பக்கர் ஸமானும் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த இப்திகார் அஹமட் (23) , இமாத் வஸீம் (22) என ஓரளவிற்கு ஓட்டங்களை சேர்த்த போதிலும் பாகிஸ்தான் அணியால் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி 22 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்து தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது. பந்துவீச்சில் டொப்லே 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *