தாக்குதல் நடாத்தப்பட்டமை க்கான எந்த அறிகுறியும் இல்லை; ரைசியின் மரணம் குறித்த நிபுணர் குழு அறிக்கை.
மறைந்த ஈரான் ஜனாதிபதி மர்ஷூம் றைசி அகால மரணம் குறித்த ஆரம்ப அறிக்கை வெளியாகி உள்ளது. ஈரான் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்கள் அடங்கிய விசேட குழு இந்த விபத்தின் அறிக்கையே வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு இணங்க ஈரான் ஜனாதிபதி வெளிவகார அமைச்சர் உட்பட 09 பேர் பயணித்த ஹெலியின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் ஹெலியின் பாகங்களிலோ விபத்து இடம்பேற்ற இடத்திலோ அல்லது ஹெலியின் சிதைவுகளிலோ காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
3 ஹெலிகாப்டர்கள் சென்ற றைசியின் இந்தப் பயணத்தின் போது ஜனாதிபதி பயணித்த ஹெலியின் விமானி விபத்து இடம் பெறுவதற்கு 45 நிமிடங்களுக்கு முன் அங்கு நிலவிய சீரற்ற கால நிலையை எனைய இரண்டு ஹெலிகொப்டர்களின் விமானிகளுக்கும் அறிவித்துள்ளார்.
அத்துடன் ஹெலிகாப்டர்களை மேகக் கூட்டங்களுக்கு மேல் உயர்த்தி பயணிக்குமாறும் வேண்டியுள்ளார். ஜனாதிபதி றைசியின் செயலணிப் பிரதானி குலாம் மொகமட் ஹூசைனின் தகவலுக்கு இணங்க மேகங்களுக்கு மேல் எழும்பிய ஏனைய இரண்டு ஹெலிகொப்டர்களின் விமானிகளும் ஜனாதிபதியின் ஹெலிகொப்டர் காணாமல் போனதை உணர்ந்துள்ளனர்
காலநிலை சீரின்மையால் தொடர் பாடல்களும் துண்டிக்கப்பட்டிருத்ததால் ஜனாதிபதியின் ஹெலி தரையிறக்கப் பட்டிருக்கலாம் என ஊகிக்கப் பட்டுள்ளது இந்நிலையில ஜனாதிபதி பயணித்த ஹெலியில் உள்ளவர்களுக்கு தொடர்பை ஏற்படுத்திய போதிலும் அதற்கு பதில்கள் வரவில்லை எனினும் சிறிது நேரத்தில் டப்ரிஸ் இமாம் ஆயதுல்லா ஹஷீம் தொலைபேசியில் பேசி எனக்கு கஷ்டமாக இருக்கிறது பக்கத்தில் எங்கு இருக்கிறேன் என்பது தெரியாது அடுத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதும் தெரியாது என கேட்கப்பட்ட விடயங்களுக்கு மாத்திரம் கஷ்டத்துடன் பதிலளித்து கொண்டிருந்த போது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது அதன் எடுக்கப்பட்ட அழைப்புகளுக்கு எவரின் பதில்களும் கிடைக்கவில்லை எனவும் அவர் இவ்விபத்து தொடர்பான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.