விளையாட்டு

9ஆவது ரி20 உலகக்கிண்ணம்; வேகப்பந்து வீச்சில் மிரட்டும் பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

9ஆவது இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடருக்கான பாபர் அஸாம் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் குழாம் தற்சமயம் அந்நாட்டு கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ள 9ஆவது ரி20 ஆடவர் உலகக்கிண்ணத் தொடருக்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளநிலையில் போட்டிகளில் பங்கேற்கும் 20 அணிகளில் 19 அணிகள் தமது 15 வீரர்கள் கொண்ட குழாத்தினை அறிவித்திருக்க இன்றைய தினம் இறுதி அணியாக பாகிஸ்தான் தனது 15 வீரர்கள் கொண்ட குழாத்தை அறிவித்துள்ளது.

இவ் உலகக்கிண்ணத் தொடரின் பாகிஸ்தான் அணியை நட்சத்திரத் துடுப்பாட்டவீரரான பாபர் அஸாம் வழநடாத்துகின்றார். மேலும் துடுப்பாட்ட வீரர்களாக இளம் இடதுகைத் துடுப்பாட்ட வீரரான சைம் ஐயூப்இ மற்றுமொரு இடதுகை மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரரான பக்கர் சமான் ஆகியோருடன் இளம் அறிமுக வீரரான உஸ்மான் கான் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர்களாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான முஹம்மது ரிஸ்வான் மற்றும் மத்திய வரிசை அதிரடித் துடுப்பாட்ட வீரரான அஸாம்கான் ஆகிய இருவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சுழல்பந்து சகலதுறை வீரர்களான அனுபவமிக்க இப்திகார் அஹமட், சதாப்கான் மற்றும் இமாத் வசீம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும் இம்முறை பாகிஸ்தான் அணி பலமிக்க வேகப்பந்துவீச்சு வரிசையை மேலும் பலப்படுத்தியுள்ளது. அந்தவகையில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்து மீண்டும் அணியில் இணைந்து கொண்ட முஹம்மது ஆமீர் உலகக்கிண்ணக் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். மேலும் முன்னாள் அணித்தலைவரான ஷஹீன் அப்ரீடி ஆகியோருடன் வலதுகை வேகப்பந்து வீச்சாளர்களான நஸீம் ஷா, ஹாரிஸ் ரௌப், ஆகியோருடன் இளம் வேகப்பந்து வீச்சாளர்களான அப்பாஸ் அப்ரீடி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

 

Pakistan squad:

Babar Azam (captain)
Abrar Ahmed
Azam Khan
Fakhar Zaman
Haris Rauf
Iftikhar Ahmed
Imad Wasim
Mohammad Abbas Afridi
Mohammad Amir
Mohammad Rizwan
Naseem Shah
Saim Ayub
Shadab Khan
Shaheen Shah Afridi
Usman Khan

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *