உள்நாடு

புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், நகரசபை, ஜம்இயத்துல் உலமா நகரக் கிளை இணைந்து வழங்குகின்ற முக்கிய அறிவித்தல்.

புத்தளம் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலைமைகளைத் தொடர்ந்து பல சுகாதார பிரச்சனைகளும் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

வயிற்றோட்டம், எலிக்காய்ச்சல் மற்றும் சிரங்கு போன்ற நோய்கள் ஏற்படலாம் எனவும், பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும்
புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், புத்தளம் நகரசபை மற்றும் புத்தளம் ஜம்இயத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை ஆகியன இணைந்து கேட்டுக்கொண்டுள்ளன.

காய்ச்சல், வயிற்றோட்டம், வயிற்று வலி போன்ற நோய்கள் காணப்பட்டால் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு செல்லும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அத்தோடு கீழ்வரும் சுகாதார பழக்க வழக்கங்களை கடைபிடிக்கும்படியும் வேண்டிக்கொள்ளப்படுகின்றது.

  • முடியுமானவரை கொதித்தாறிய நீரையே அருந்துங்கள்.
  • எப்போதும் நன்கு சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளுங்கள்.
  • முடியுமானவரை வீடுகளில் தயாரித்த உணவுகளை உண்ணுங்கள்.
  • மலசல கூட்டத்திற்கு சென்று வந்தால் சவர்க்காரமிட்டு கைகளை கழுவுங்கள்.
  • உணவுகளை உண்ணு முன்பும் பின்பும் சவர்க்காரமிட்டு கைகளைக் கழுவுங்கள்.
  • வெள்ள நீரால் கிணறுகள் பாதிப்படைந்து இருந்தால் சரியான முறையில் சுத்திகரிப்பு செய்து குளோரின் இட்டு தொற்று நீக்கம் செய்து பாவியுங்கள்.
  • சிறுவர்கள் மற்றும் உடலில் காயங்கள் உள்ளவர்கள் கழிவு நீரில் இறங்குவதையோ விளையாடுவதையோ முடியுமானவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  • உடலில் காயங்கள் உள்ளவர்கள் குளங்களில் குளிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  • மலசல கூடங்களை குளோரின் இட்டு நன்கு தொற்று நீக்கம் செய்து கொள்ளுங்கள்.
  • டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் காணப்பட்டால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்துங்கள்.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *