உள்நாடு

புத்தள மாவட்ட தமிழ் மொழி மூல ஊடகவியலாளர்களை விருது வழங்கி கைளரவித்த தூய தேசத்திற்கான இயக்கம்.

புத்தள மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் சேவையைப் பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு  தூய தேசத்திற்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (23) கற்பிட்டியில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்டத்தில் இயங்கிவரும் தூய தேசத்துக்கான இயக்கம் இளம் அரசியல்வாதியான இஷாம் மரைக்காரின் தலைமையில் ஏராளமான சமூக சேவைகளை இம் மாவட்டத்திற்கு வழங்கி வருகின்றது. கடந்த வருடம் அறிவிக்கப்பட்டு பின்னர் பிற்பேடப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது அறிமுகத்தை மேற்கொண்ட இவ் இயக்கம் இளம் துடிப்புமிக்க வேட்பாளர்களை களம் இறக்கியிருந்தது.

முன்னாள் பிரதி அமைச்சரும், புத்தள மாவட்ட  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் புத்தள நகரபிதாவுமான மர்ஹும் கே.ஏ. பாயிஸின் 3ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு தூய தேசத்திற்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கற்பிட்டி பிரதேசத்தின் தூயதேசத்திற்கான இயக்கத்தின் அமைப்பாளரான ஹஸ்லான் ரஸாக் தலைமையில் புத்தள மாவட்டத்தின் தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் பதினொரு பேருக்கு விருது வழங்கி கைளரவிக்கும் நிகழ்வு இன்று (23) கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் மர்ஹும் தம்பி நெய்னா மரிக்கார் ஞாபகார்த்த மண்டபத்தில் பிற்பகல் இடம்பெற்றது.

இதில் புத்தள மாவட்டத்தில் தற்சமயம் ஊடகவியலாளராக தொலைக்காட்சி , அச்சுஊடகம் மற்றும் இணைய ஊடகம் ஆகியவற்றில் கடமையாற்றும் அனுபவமிக்கவர்களும் இளம் வயதுடையவர்களும் என 10 பேர் வருகை தந்து அவர்களுக்கான நினைவுச் சின்னங்களை தூய தேசத்திற்கான இயக்கத்தின் உறுப்பினர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

மேலும், விருதினைப் பெற்றுக் கொண்ட அத்தனை ஊடகவியலாளர்களும் ஊடகம் தொட்ர்பாகவும்இஅவர்கள் கடந்து வந்த பாதை தொடர்பான அனுபவத்தினையும், எதிர்காலத்தில் எவ்வாறான செயற்திட்டங்கள் செய்யப்பட வேண்டும் என்பது பற்றியும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை மிகச் சிறந்த அம்சமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.


(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *