கொள்ளுப்பிட்டி பள்ளியில் நடைபெற்ற ரைசிக்கான பிரார்த்தனை நிகழ்வு
ஹெலிகாெப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி மர்ஹும் கலாநிதி இப்ராஹிம் ரைஸி உள்ளிட்ட அதே விபத்தில் உயிரிழந்த ஏனையோரின் மறைவு குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கைக்கான ஈரான் தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்த இரங்கல் நிகழ்ச்சியும், துஆ பிரார்த்தனையும் நேற்று (22) மாலை கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
பள்ளிவாசல் சார்பாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி முஹம்மட் உவைஸ் முஹம்மட் வரவேற்புரையாற்றினார். அத்துடன், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் ஈரான் இலங்கைக்கான இஸ்லாமிய குடியரசின் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் ஆகியோரும் நிகழ்வில் உரையாற்றினார்.
பள்ளிவாசல் பிரதம இமாம் அஷ்-ஷேக், அல் ஹாபிழ் எம்.பி.எம். ரிஸ்வான் துஆ பிரார்த்தனை செய்தார்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், ஏ.எச்.எம்.பெளசி உட்பட பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.