உள்நாடு

புத்தளம் உப்பு உற்பத்தியாளர்களின் காணி ஆக்கிரமிப்பு பற்றி பாராளுமன்ற உறுப்பினர் றவூப் ஹக்கீமை சந்தித்த உப்பு சங்கம்..!

புத்தளம் உப்பு உற்பத்தியாளர்களுக்கு சொந்தமான சுமார் 450 வருட வரலாற்றை கொண்ட காணியை ஆக்கிரமித்து கையகப்படுத்த எத்தனிக்கும் நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் அழைப்பின் பேரில் ஒரு சில உயர் அதிகாரிகளை சந்திப்பற்காக நேற்று (22) பாராளுமன்றம் சென்ற போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுடனான சந்திப்பு ஒன்றும் பாராளுமன்றத்தில் இடம் பெற்றது.

இதன் போது உப்பு உற்பத்தியாளர்களுக்கும், புத்தளத்து நகர வாழ் மக்களுக்கும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகள் சம்மந்தமாகவும் ஏற்கனவே முன்னாள் நகர சபை உறுப்பினர் ரனீஸ் பதூர்தீனால் தெரிவிக்கப்பட்டிருந்த போதும், மேலதிகமான தெளிவுகளும், ஆதாரங்களும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமிடம் நேற்று (22) காண்பிக்கப்பட்டது.

புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவர் ரனீஸ் பதூர்தீனால் பாராளுமன்றத்தில் இந்த அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புமாறும் விஷேட வேண்டு கோள் ஒன்றும் விடுக்கப்பட்டது.

இதன் போது, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் உட்பட புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவர் ரனீஸ் பதூர்தீன் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *