உள்நாடு

பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 133ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸின் தமாம் வைபவம்..!

வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 133ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸின் தமாம் வைபவம்; எதிர்வரும் 25ஆம் திகதி (25.05.2024) சனிக்கிழமை மாலை அஸர் தொழுகையின் பின்னர் கலீபத்துஷ் ஷாதுலி அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.ஐ.எம். ரபீக் (பஹ்ஜி), கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.எம். செய்னுல் ஆப்தீன் (பஹ்ஜி) ஆகியோர் தலைமையில் நடைபெறும்.

சீனன்கோட்டை பள்ளிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்படி மஜ்லிஸ் நடைபெறுவதோடு தொடர்ந்து 9 நாட்கள் மனாகிப் மஜ்லிஸ் இடம்பெறுவதோடு, உலமாக்களினால் மார்க்க உபன்னியாசங்களும் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

தினமும் இடம்பெறும் மனாகிப் மஜ்லிஸில் ஆத்மீக ஞானி இமாம் அபுல் ஹஸன் அலியுஷ் ஷாதுலி (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு, ஆன்மீகப் பணிகள் பற்றிய விசேட மார்க்கச் சொற்பொழிவாற்றி வருகிறது.

கலீபதுல் குலபாவும் காலி அலிய்யா சட்டக்கல்லூரி பணிப்பாளருமான மௌலவி உஸ்தாத் எம்.இஸட். ஸ{ஹ்ர் (பாரி) கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அஷ்ஷெய்யித் அலவி ஸாலிஹ் மௌலானா (முர்சி) ஆகியோர் தமாம் மஜ்லிஸில் உரையாற்றவுள்ளதாக சீனன்கோட்டை பள்ளிச்சங்க இணைச் செயலாளர் அல்ஹாஜ் எம்.எம். சிஹாப் தெரிவித்தார்.

சீனன்கோட்டை பள்ளிச் சங்க தலைவர் ஏ.எச்.எம். முக்தார் ஹாஜியாரின் வழிகாட்டலின்கீழ் இடம்பெறும் இம்மஜ்லிஸில்; கலீபாக்கள், உலமாக்கள், முகத்தமீன்கள், இஹ்வான்கள் பங்குபற்றுவர்.
ஷாதுலிய்யாத் தரீக்காவின் ஸ்தாபகர் அல் குத்புல் அக்பர் இமாம் அபுல்ஹசன் அலியுஷ் ஷாதுலி (ரலி) அவர்களின் 850ஆவது ஜனன தினத்தை முன்னிட்டும் ஷாதுலிய்யா மஷாயிகுமார்களின் ஞாபகார்த்தமாகவும் இம்மஜ்லிஸ் இடம்பெறுகிறமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *