காஸா சிறுவர் நிதியத்துக்கு சீனன்கோட்டை மக்கள் வழங்கிய பாரிய நிதியுதவி..!
பேருவளை சீனன்கோட்டை பள்ளி சங்கம் சீனன்கோட்டை இரத்தினக் கல் மற்றும் ஆபரண வர்த்தகர் சங்கம் இணைந்து பலஸ்தீன் காஸா சிறுவர் நிதியத்திற்காக சேமிக்கப்பட்ட 40,198,902 ரூபா நிதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் 21ம் திகதி கையளிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினரும் சீனன்கோட்டை இரத்தினக்கல் வர்த்த சங்கத் தலைவருமான மரஜான் பளீல்,ஜாமியா நளீமியா கலாபீட நிர்வாக சபை தலைவரும் சீனக் கோட்டை பள்ளிச் சங்க பிரதி தலைவருமான அல்-ஹாஜ் யாகூத் நளீம் பள்ளிச் சங்க இணைச் செயலாளர் எம்.எம்.எம்.சிஹாப் ஹாஜியார்,ஜெம் ஸ்ரீலங்கா தலைவர் அல்-ஹாஜ் ரியாஸ் காஸிம்,சீனன்கோட்டை இறத்தினாக்கள் மற்றும் ஆபரண வர்த்தகர் சங்க உப தலைவர் ரிஸ்வான் நயீம்,முன்னாள் பொருளாளர் அல்-ஹாஜ் அஸ்ஹர் ஸவாஹிர்,கலாநிதி அஷ்செய்க் அரபாத் கரீம் (நளீமி) சினன்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர் சங்க உறுப்பினர்களான பின்ஸிபான் பாரூக்,பைஸர் ஹமீத்,மிப்ராஜ் முபாரக்,அர்சத் பைரூஸ்,பிராஸ்தீன் பஹ்ருத்தீன்,பஸ்லி மர்ஸூக்,அகீல் சாபி,ஆதிப் நுபைல்,ரயீஸுல் ஹக்,றிப்கான் றிஸ்வி,சவூதி அரேபியாத் தூதுவர் கலாநிதி அமீர் அஜ்வாத் ஆகியோர் இதன் போது பங்கு பெற்றினர் பலஸ்தீன் காஸா சிறுவர் நிதியத்திற்காக சீனன்கோட்டை பள்ளிச்சங்கமும் சீனன் கோட்டை இரத்தினக்கல் வர்த்தகர் சங்கமும் பாரிய நிதித் தொகையொன்றை சேகரித்தது.
இலங்கையின் இத்திகாசத்தில் வெளிநாடு ஒன்றின் மனிதாபிமான அவசிய தேவை கருதி சேகரிக்கப்பட்ட ஆக கூடுதலான தொகை இதுவென தெரிய வருகிறது.
காஸா சிறுவர் நிதியத்திற்கு தாராள மனப்பான்மையுடன் நிதி உதவி செய்தவர்களுக்கு சீனன்கோட்டை பள்ளிச் சங்கமும் சீனங்கோட்டை இரத்தினக் கல் ஆபரண வர்த்தக சங்கமும் நன்றி தெரிவித்துள்ளது.
(பேருவளை பி.எம்.முக்தார்)