அமெரிக்காவிடம் மண்டியிட்ட வங்கப்புலிகள்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொரின் முதல் போட்டியில் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற அமெரிக்க அணி தொடரை 1:0 என ஆதிக்கத்துடன் ஆரம்பித்துள்ளது.
9ஆவது ரி20 உலகக்கிண்ணம் இன்னும் 10 நாட்களில் ஆரம்பிக்கவிறுக்கும் நிலையில் உலகக்கிண்ண அணியுடன் அமெரிக்கா சென்றுள்ள பங்களாதேஷ் அணி அமெரிக்க அணியுடன் முதல் முறையாக 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நேற்று (21) முதல் போட்டி ஹவ்ஸ்டொன் மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்திருந்தது. இதற்கமைய துடுப்பாடக் களம் நுழைந்த பங்களாதேஷ் அணிக்கு மத்திய வரிசை வீரரான தவ்ஹீட் ஹரிடோய் மாத்திரம் அரைச்சதம் கடந்து 58 ஓட்டங்களையும், மொஹமதுல்லா 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் ஸ்டீவன் டெய்லர் 2 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
பின்னர் 154 என்ற கடின இலக்கினை நோக்கி பதிலுக்கு களம் கண்ட அமெரிக்க அணிக்கு பந்துவீச்சில் துணைநின்ற ஸ்டீவன் டெய்லர் ஆரம்ப வீரரான வந்து 28 ஓட்டங்களையும் , அண்டிஸ் ஹவுஸ் 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இருப்பினும் 6ஆவது விக்கெட்டில் இணைந்த முன்னால் நியூஸிலாந்து அணியின் வீரரான கொரிஜே அண்டர்ஸன் மற்றும் இந்நிய வம்சாவளியான ஹம்ரீட் சிங் ஆகிய இருவரும் அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றனர்.
இருவரும் பிரிக்கப்படாத 62 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த அமெரிக்கா அணி 156 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுக்காளால் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. துப்பாட்டத்தில் அண்டர்ஸன் மற்றும் சிங் ஆகியோர் முறையே 34 மற்றும் 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் முஸ்திபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொரில் 1:0 என முன்னிலை பெற்றது அமெரிக்கா அணி. 2ஆவது போட்டி நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)