உள்நாடு

திப்பிடிய ரிபா ஆசிரியர் ஓய்வு பெற்றார்..!

அரநாயக்க திப்பிட்டியைச் சேர்ந்த எம். எப். எம். ரிபா ஆசிரியர் அவர்கள் தனது 36 ஆண்டு கால ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். திப்பிட்டிய முஸ்லிம் வித்தியாலயத்தினதும், பேருவளை ஜாமிய்யா நளீமிய்யாவினதும் பழைய மாணவரான இவர் 1986 ஆம் ஆண்டு பஸ்தும்ரட கல்வியியல் கல்லூரிக்கு கேகாலை மாவட்டதிலிருந்து முதன் முதலில் ஆங்கில மொழி மூலம் இத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட இரண்டு முஸ்லிம் மாணவர்களில் ஒருவராவார். 1985 ஆம் ஆண்டு இக்கல்வியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.1989 ஆம் ஆண்டு தனது முதல் ஆங்கில ஆசி ரியர் நியமனத்தின்  மூலம் தெல்த்தொட எனஸல்கொல்ல மத்திய கல்லூரியில் கற்பிக்க ஆரம்பித்தார்.அதனை தொடர்ந்து பல பாடசாலைகளில் கற்பித்த இவர் இறுதியாக தனது ஊரிலுள்ள திப்பிட்டிய முஸ்லிம் வித்தியாலயத்தில் 14 ஆண்டுகள் சேவையாற்றி பின் ஓய்வு பெற்றார்.

 பன்முக ஆளுமைமைகளைக் கொண்ட ரிபா ஆசிரியர் அவர்கள் தன்னுடைய பாடப் பரப்பில் கொண்டுள்ள புலமைத்துவம் மற்றும் புதிய விடயங்களை தேடி கற்று,கற்பிக்கும் ஆர்வம் என்பன மற்ற  ஆசிரியர்களை திரும்பி பார்க்க செய்தது எனலாம். இவரது கல்வி தேடலும்,வாசிப்பு தாகமும்,விமர்சன பார்வையும் அனைவரதும் மனதிலும் ஏற்றுக் கொள்ள கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். இவர் ஒய்வு பெறும் தினத்தில்,இவரது மாணவர் ஒருவர் சட்டதரணியாக பதவி ஏற்றமை இவரது பணிக்கு கிடைத்த பரிசாகும்.மேலும் தெல்தொட முஸ்லிம் வித்தியாலயத்தின் நிகழ்வொன்றின் போது அங்கு உரையாற்றிய அதிபரின் கருப் பொருளே ரிபா ஆசிரியர் பற்றியதாக இருந்தமை அவரது சேவைவைக்கு கிடைத்த கௌரவம் எனலாம். மேலும்
இவர் மும்மொழிகளிலும் அறிவிப்பு செய்யக்கூடிய சிறந்த அறிவிப்பாளரும் ஆவார். குடும்பத்தில் ஒரே ஒரு ஆண் பிள்ளையான இவருக்கு நளீரா,லமீனா, ஆசிரியைகளான நஸீமா,லரீபா  ஆகியோர் சகோதரிகள் ஆவார்.மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான இவரது துணைவியார் எம். ஜி.நூரி ஆசிரியை ஆவார்.
தனது 59 ஆவது வயதில் ஒய்வு பெற்ற இவர் காலஞ்சென்றவர்களான ஏ.ஏ.முஹம்மது பௌஸ் ஆசிரியர், மிஸ்ரியா பீபீ ஆசிரியை ஆகியோரின் புதல்வரும் ஆவார்.
(மாவனல்லை செய்தியாளர் -பாரா தாஹீர் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *