Monday, November 25, 2024
உள்நாடு

ஈரான் தூதுவரிடம் அனுதாபம் தெரிவித்த முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள்.

ஹெலி விபத்தில் காலமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாஹியான் உட்பட உயரதிகாரிகளுக்காக அனுதாபம் தெரிவிக்கும் வகையில் புல்லர்ஸ் வீதியிலுள்ள ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப பதிவேட்டில் சிரீலங்கா முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் இன்று கைச்சாத்திட்டனர்.

இதில் சிரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன், செயலாளர் எம்.டி.எம் றிஸ்வி,செயற் குழு உறுப்பினர் திருமதி ரசீத் தஹ்லான் ஆகியோர் பதிவேட்டில் கைச்சாத்திட்டதோடு தூதுவரிடம் அனுதாப செய்தியையும் கையளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *