ரைஷிக்காக வைக்கப்பட்டுள்ள அனுதாபப் பதிவேட்டில் கையெழுத்திட்டார் இஷாம் மரிக்கார்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிகார அமைச்சரின் மறைவிற்கு இலங்கையின் தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் எஸ்.எம். இஷாம் மரிக்கார் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் வகையில் இன்று கத்தாரில் உள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்று அனுதாபப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
பின்னர் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி பற்றி குறிப்பிடுகையில், “ஈரானின் ஜனாதிபதியாக அவரது தன் நம்பிக்கையும், தலைமைத்துவ ஆற்றலும், தைரியமான முடிவுகளும் எப்போதும் நம்மை ஊக்கப்படுத்தக்கூடிவ யே.
மத்திய கிழக்குத் தரையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான அவரது அர்ப்பணிப்பு அடுத்த தலைமுறைகளுக்கும் எதிரொலிக்க வேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பினை கத்தாருக்கான ஈரானிய தூதுவர் அலி ஷலிஹபாடியிடம் எத்திவைத்தோடு நமது இதயப்பூர்வமான அனுதாபங்களை பகிர்ந்து கொண்டோம்.” என்றார் தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் இஷாம் மரிக்கார்.