ரைசியின் ஜனாஸா இன்று நல்லடக்கம்; ஐந்து நாள் துக்கம் அனுஷ்டிப்பு; தெஹ்ரானில் திரளும் இலட்சக்கணக்கான மக்கள்.
ஹெலி விபத்தில் மரணமடைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் இன்று செய்வாய் கிழமை தெஹ்ரானில் பூரண அரச மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அந் நாட்டு அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ரைசியின் ஜனாஸா அவரின் சொந்த ஊரான மசாத் எனும் புனித நகரில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.தமது தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதிக் கிரியைகளுக்காக அங்கிருந்து அவரது ஜனாஸா தெஹ்ரானுக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதி ரைசியின் மறைவையொட்டி அங்கு ஐந்து நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் இன்று துக்கம் அனுஷ்டிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலட்சக்கணக்கான ஈரானியர்கள் தெஹ்ரானில் ஒன்று திரண்டிருப்பதாகவும் சோகம் தாங்க முடியாமல் மக்கள் கதறியழுத வண்ணம் தமது தலைவருக்காக பிரார்த்தனைகள் புரிந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.