விளையாட்டு

பரா தடகள சம்பியன்ஷிப் போட்டி. ஈட்டி எறிதலில் உலக சாதனை படைத்த சமித துலன்.

ஜப்பானில் நடைபெற்று வரும் பரா தடகள உலக சம்பியன்ஷிப் போட்டியில் (F44) ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் சமித துலன் புதிய உலக சாதனையை படைத்தார்.

ஜப்பானின் கோபே நகரில் இடம்பெற்றுவரும் பரா தடகள உலக சம்பியன்ஷிப் போட்டி நிகழ்ச்சி கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்திருந்தது. இப் போட்டி நிகழ்ச்சி எதிர்வரும் 25ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்காக இலங்கையைப் பிரதிநித்தித்துவம் செய்து ஏராழமான வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

அந்தவகையில், இன்று (21) இடம்பெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் சமித துலன் பங்கேற்றிருந்ததுடன், அவர் தனது முதல் எறிதல் முயற்சியிலேயே 66.49 மீட்டர் தூரத்திற்கு எறிந்து புதிய உலக சாதனையைப் படைத்து அசத்தினார்.

இதற்கு முன்னர் உலக சாதனையாக 66.29 மீட்டர் தூரம் எறியப்பட்டதே இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன் அதனை அஸ்திரேலியாவின் எம். புரியன் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *