உள்நாடு

முல்லை ஸ்கீம் கிராமத்திற்கு சமைத்த உணவு வழங்கிவைப்பு.

ஐக்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் Helping Hands Puttalam அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில் பாலாவி – முல்லை ஸ்கீம் கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேற்றிரவு (20) சமைத்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான சப்வான் சல்மான், புத்தளம் தொகுதி அமைப்பாளர் எப். எம். றாபி மற்றும் Helping Hands Puttalam அமைப்பின் பணிப்பாளர் எம்.என்.எம். றினோஸ் ஆகியோர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான சமைத்த உணவுகளை முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினரிடம் கையளித்தனர்.

இதன்போது, பாலாவி – முல்லை ஸ்கீம் கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 85 குடும்பங்களைச் சேர்ந்த 135 பேருக்கு இரவு நேரத்திற்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் நிர்வாக சபை உறுப்பினர்களையும், Social Aid சமூக அமைப்பின் உறுப்பினர்களையும் ஐக்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் Helping Hands Puttalam அமைப்பின் முக்கியஸ்தர்களை சந்தித்து சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

முல்லை ஸ்கீம் கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்ரபிலும், வெள்ள அனர்த்தத்தில் இருந்து கிராம மக்களை பாதுகாப்பது தொடர்பில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் குறித்தும் இதன்போது கேட்டறித்து கொண்டனர்.

மேலும், முல்லை ஸ்கீம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஐக்கிய காங்கிரஸ் கட்சி மற்றும் Helping Hands Puttalam அமைப்பின் முக்கியஸ்தர்கள் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும் சென்று அவர்களின் நிலமைகளை கேட்டரிந்தனர்.

(ரஸீன் ரஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *