மாத்தளையில் இடம்பெற்றுவரும் தேசிய வெசாக் தின அனுஷ்டிப்பு ஏற்பாடுகள்..!
இவ்வருட தேசிய வெசாக் தினம் அரசினால் மாத்தளையில் அனுஷ்டிக்க ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது
இன்று 21 ந்திகதி முதல் 27ம் திகதிவரை இடம்பெறும் இத்தினத்தினங்களில் அனைத்து மதுபானசாலைகளும்
இறைச்சிக்கடைகளும் மூடப்பட்டிருக்கும்.
அன்றைய முதல் தினமன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் மாத்தளைக்கு வருகைதந்து மாத்தளை விகார வீதி பெளத்த விகாரை உட்பட ஏனைய முக்கிய விகாரைகளிலும் சமய நிகழ்வுகளில் கலந்துகொள்வார்கள்.
24ம் திகதியன்று இவ்வெசாக் தினத்தைமுன்னிட்டு அதனைச் சிறப்பிக்கும் வகையிலும் இன நல்லுறவை வலுப்படுத்தும் வகையிலும் முவின மக்களது நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெறவிருப்பதுடன் பெரஹரா . கரோல் , பவனிகளும் , இடம்பெறவுள்ளன.
இவ் வெசாக் தினத்தை முன்னிட்டு இராணுத்தினரால் உக்குவளை மற்றும் மாத்தளை பகுதிகளில் பெளத்த தோரணங்கள் நிறுவும் பணிகள் இடம்பெற்றுவருவதையும் வீதிகள் பிரதானவீதிகள் எங்கும் மற்றும் அரச தனியார் வர்த்தக நிறுவனங்களில் பெளத்த கொடிகள் பறக்கவிட்டிருப்பதையும் காணமுடிகிறது.
(உக்குவளை ஜலீல்)