உள்நாடு

புத்தளத்தில் முன்னெடுக்கப்படும் நிவாரணப் பணிகளை பார்வையிட்ட பா.உ அலி சப்ரி றஹீம் .

புத்தளம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கி காணப்படுகின்றது.

புத்தளம் நகரின் நீரில் மூழ்கியுள்ளவர்களுக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்காக புத்தளம் பெரிய பள்ளிவாசலின் தலைமையில், புத்தளம் நகர மற்றும் புத்தளம் மாவட்ட உலமா சபையின் முன்னெடுப்பில் ஐக்கிய வர்த்தக சங்கம், வரையறுக்கப்பட்ட உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கம், பொது நிறுவனங்கள் மற்றும் தனவந்தர்களின் உதவியால் உடனடி நிவாரணப் பணிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

தமது பங்களிப்பாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் ஒரு தொகை அரிசியினை வழங்கி வைத்துள்ளார். அத்துடன் இந்த முன்னெடுப்பு தொடர்பாக IBM மண்டபத்திற்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் நேரில் சென்று பார்வையுற்றார்.

தொடர்ச்சியாக மழை பெய்து வரும் காரணத்தினால் இன்று இரவு வேளையிலும் சமைத்த உணவுகளை நிவாரணமாக வழங்குவதற்காக புத்தளத்தைச் சேர்ந்த தனவந்தர்கள், பொது அமைப்புகள், நிறுவனங்கள் தங்களது உதவிகளை புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிவாரண குழுவுக்கு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *