குருநாகல் பிரதேச பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்.
குருநாகல் நகர் மற்றும் அண்டிய பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான கலந்துரையாடல் வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது குருநாகல் நகர தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை , பௌதீக வளக்குறைபாடுகள், நகர்ப் பகுதியில் வாழும் மக்கள் எதிர்கொண்டுள்ள வரிமதிப்பீ்ட்டுப் பிரச்சினை மற்றும் போன்ற விடயங்கள் குறித்து பொதுமக்கள் சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் கௌரவ ஆளுனரின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
மேற்குறித்த பிரச்சினைகள் தொடர்பில் துரிதமான நடவடிக்கைகள் ஊடாக நிரந்தரத்தீர்வினைப் பெற்றுத் தருவதாக கௌரவ ஆளுனர் நஸீர் அஹமட் உறுதியளித்தார்.
அத்துடன் குருநாகல் பிரதேசத்தில் இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தான் கூடுதல் கரிசனை கொண்டுள்ளதாகவும், அவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் கௌரவ ஆளுனர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்
ஆளுனர் பணிமனையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின் போது குருநாகல் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் அசார்தீன் மொயினுதீன், குருநாகல் பெரிய பள்ளிவாசலின் தலைவர் மிலான் ஹாஜியார், சாஹிராக் கல்லூரி அதிபர் ஏ.எம். சித்தீக் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.
(இக்பால் அலி)