விமரிசையாக நடைபெற்ற ஹிமா பெண்கள் அமைப்பின் பரிசளிப்பு நிகழ்வு.
ஹிமா பெண்கள் நலன்புரிச் சங்கத்தின் RAMZAN SPECIAL AWARD (அகில இலங்கை ) நிகழ்ச்சியின் சிறுவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு மற்றும் (பெண்களுக்கான வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்.மற்றும் மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு 18.05.2024 நீர்கொழும்பு மாநகர கேட்போர் மண்டபத்தில் ஹிமா பெண்கள் நலன்புரிச் சங்கத்தின் தலைவி ஆசிரியை நஸ்மின் நஸ்மியா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பிணர் டொக்டர் காவிந்த ஜெயவர்த்தன. கௌர அதிதியாக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் மற்றும் ஹூசைன் பௌன்டேசன் தலைவர் ஹூசைன் போல்ட், முன்னாள் மேல்மாகான சபை உறுப்பிணர் இப்திக்கார் ஜெமீல், நீர்கொழும்பு காதிநீதிபதி, பாடசாலை அதிபர்கள், முன்னாள் அதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் மகளிர்களுக்கான விருதுகள், பரிசுப்பொருட்கள் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் ஹிமான அமைப்பின் உறுப்பிணர்கள் மற்றும் ஹிமாவின் வேலைத் திட்டங்களுக்காக உதவிகளை மேற்கொண்டவர்களுக்குமான கெளரவிப்புக்களும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வுகள் ஊடாக பாடசாலை மாணவர்கள் வீடுகளில் உள்ள இளம் யுவதிகளை தலைமைத்துவம் மற்றம் சமுக சேவை ஊடாக மாதாந்தம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது பற்றி இவ் அமை்பினை பாராட்டி உரையாற்றினார் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்.
(அஷ்ரப் ஏ சமத்)