இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் மத நல்லிணக்கத்திற்கான முன்னெடுப்பு .
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் மத நல்லிணக்கத்திற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் தேசிய ரீதியில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் மதச் சுதந்திரம் மற்றும் மதப் பன்மைத்துவம் குறித்த அறிவூட்டல் செயலமர்வு நேற்று மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் SMM.முஸர்ரப் ஏனைய அரசியல் வாதிகள் உட்பட மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மதத்தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் நிகழ்வினை பேரவையின் சிரேஸ்ட திட்ட முகாமையாளர் உவைஸ் மதனி நெறிப் படுத்தினார்.நிகழ்வின் நோக்கம் பற்றி பேரவையின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் MSM.இக்ராம் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
(இஸட்.ஏ.றஹ்மான் – ஒலுவில் செய்தியாளர்)