விளையாட்டு

9ஆவது ரி20 உலகக்கிண்ணம். பயிற்சிப் போட்டிக்கான அட்டவணை வெளியீடு.

9ஆவது ரி20 உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சி ஆட்டங்களின் அட்டவணை நேற்று ஐசிசி இனால் வெளியிடப்பட்டிருந்தது. அதற்கமைய இப் பயிற்சி ஆட்டங்கள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ள 9ஆவது ரி20 உலக்கிண்ணத் தொடர் எதிர்வரும் ஜுன் மாதம் 1ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. அந்தவகையில் தற்சமயம் இத் தொடரில் பங்கேற்கவுள்ள அணிகள் இரு நாடுகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளன. மேலும் இத் தொடரில் பங்கேற்கவுள்ள அணிகள் இத் தொடருக்கு முன்னர் தம் குழுக்களில் இடம்பெறாத அணிகளுடன் அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கும். அதற்கமைய பயிற்சி ஆட்டங்கள் அமெரிக்கா மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய மைதானங்களில் நடாத்த ஐசிசி திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 16 பயிற்சி போட்டிகரளை நடத்தும் மைதானங்களில் டெக்சாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி கிரிக்கெட் ஸ்டேடியம், புளோரிடாவில் உள்ள ப்ரோவர்ட் கவுண்டி ஸ்டேடியம், குயின்ஸ் பார்க் ஓவல் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி ஆகியவை அடங்கும்.

அறிவிக்கப்பட்டுள்ள பயிற்சிப் போட்டி அட்டவணையின் பிரகாரம் இலங்கை அணி எதிர்வரும் 28ஆம் திகதி நெதர்லாந்து அணியை புளோரிடாவிலும் , 31ஆம் திகதி அயர்லாந்து அணியை அதே புளோரிடா மைதானத்திலும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பயிற்சிப் போட்டியின் அட்டவணை

மே 27ஆம் திகதி திங்கட்கிழமை

  • கனடா எதிர் நேபாளம் – கிராண்ட் ப்ரேரி கிரிக்கெட் மைதானம் டெக்சாஸ்.
  • ஓமன் எதிர் பப்புவா நியூ கினியா – பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, டிரினிடாட் என்ட் டொபாகோ
  • நமீபியா எதிர் உகாண்டா – பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி , டிரினிடாட் என்ட் டொபாகோ

மே 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை

  • இலங்கை எதிர் நெதர்லாந்து – ப்ரோவர்ட் கவுண்டி மைதானம் , புளோரிடா
  • பங்களாதேஷ் எதிர் அமெரிக்கா – கிராண்ட் ப்ரேரி கிரிக்கெட் மைதானம், டெக்சாஸ்
  • அஸ்திரேலியா எதிர் நமீபியா – குயின்ஸ் பார்க் ஓவல் , டிரினிடாட் என்ட் டொபாகோ

மே 29ஆம் திகதி புதன்கிழமை

  • தென்னாப்பிரிக்கா எதிர் உள்நாட் அணி – ப்ரோவர்ட் கவுண்டி மைதானம், புளோரிடா
  • ஆப்கானிஸ்தான் எதிர் ஓமன் – குயின்ஸ் பார்க் ஓவல், டிரினிடாட் என்ட் டொபாகோ

மே 30ஆம் திகதி வியாழக்கிழமை

  • நேபாளம் எதிர் அமெரிக்க- கிராண்ட் ப்ரேரி கிரிக்கெட் மைதானம் டெக்சாஸ்
  • ஸ்காட்லாந்து எதிர் உகாண்டா – பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி , டிரினிடாட் என்ட் டொபாகோ
  • நெதர்லாந்து எதிர் கனடா – கிராண்ட் ப்ரேரி கிரிக்கெட் மைதானம் ,டெக்சாஸ்
  • நமீபியா எதிர் பப்புவா நியூ கினியா – பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, டிரினிடாட் என்ட் டொபாகோ
  • மேற்கிந்திய தீவுகள் எதிர் அஸ்திரேலியா – குயின்ஸ் பார்க் ஓவல் , டிரினிடாட் என்ட் டொபாகோ

மே 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை

  • அயர்லாந்து எதிர் இலங்கை – ப்ரோவர்ட் கவுண்டி மைதானம், புளோரிடா
  • ஸ்காட்லாந்து எதிர் ஆப்கானிஸ்தான் – குயின்ஸ் பார்க் ஓவல் , டிரினிடாட் என்ட் டொபாகோ

ஜூன் 1ஆம் திகதி சனிக்கிழமை

  • பங்களாதேஷ் எதிர் இந்தியா , இடம் இன்னும் குறிப்பிடப்படவில்லை.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *