தினகரன் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவையொட்டி எதிர் வரும் 19ஆம் திகதி பேருவளையில் மாபெரும் விழா.
தென்னிலங்கையில் முன்னணி முஸ்லிம் பாடசாலைகளுள் ஒன்றான பேருவளை மாளிகாஹேனை ஸேம் ரிபாய் ஹாஜியார் மகாவித்தியாலய (தேசிய பாடசாலை) அஷ் செய்ஹ் முஸ்தபா நாயகம் வலியுல்லாஹ் கேட்போர் கூட்டத்தில் அன்றைய தினம் மு.ப. 9:00 மணிக்கு தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர் தலைமையில் நடைபெறும்.
இப்பெருவிழாவில்உட்படகல்விஅதிகாரிகள்,கல்விமான்கள்,உலமாக்கள்,ஊடகவியலாளர்கள்,எழுத்தாளர்கள், பேருவளை தினகரன் வாசகர் வட்ட உறுப்பினர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொள்வர் என ஏற்பாட்டு குழு சார்பில் பிரபல சமூக செவையாளரும் அறிவிப்பாளரும் எழுத்தாளருமான அல்-ஹாஜ் எம்.பாஸி ஸுபைர் தெரிவித்தார்.
இவ் விழாவினை முன்னிட்டு களுத்துறை மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளின் ஓய்வு பெற்ற அதிபர்கள் மற்றும் பேருவளை தேர்தல் தொகுதியில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஓய்வு பெற்ற அதிபர்கள்,ஆசிரியர்கள் 125 பேர் கௌரவிக்கப்படவுள்ளனர். அத்தோடு முன்னணி சமூக சேவையாளர்கள்,சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் 25 பேரும் கௌரவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வேறுவளை தொகுதியில் உள்ள சீனன் கோட்டை அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலை,நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி,மாளிகாஹேனை ஸேம் ரிபாய் ஹாஜியார் தேசிய பாடசாலை, மருதானை அல் பாஸியத்துல் நஸ்ரியா மகா வித்தியாலயம்,மகொட ஐ.எல்.எம்.ஸம்ஸுதீன் மகா வித்தியாலயம்,மக்கொனை அல்-ஹஸனியா மஹா வித்தியாலயம்,தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி,அளுத்கம வீதிய முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை,அல்-ஹம்ரா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழி மூலம் தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு எம்.பாஸி சுபைருடன் 0770812420 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)