ரத்துபஸ்வல வழக்கு; மேஜர் உட்பட நால்வர் விடுதலை.
வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் இராணுவ மேஜர் உட்பட 4 சந்தேக நபர்களை விடுதலை செய்து கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (17) தீர்பளித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி அன்று வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
சுத்தமான குடிநீர் கோரி கிராம மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் 45 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.