பதவி உயர்வு பெற்று கிழக்கு மாகாண சபைக்கு செல்லும் இஸட். ஏ.எம்.பைஸலுக்கு பிரியாவிடை..!
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பணிப்பாளராக இருந்த இஸட். ஏ.எம்.பைஸல் பதவி உயர்வு பெற்று கிழக்கு மாகாண சபைக்கு உயர் பதவி ஒன்றிற்காகச் செல்வதால் திணைக்களத்தின் நலன்புரிச் சங்கத்தினால் அவருக்கான பிரியாவிடை வைபவம் இடம் பெற்றது.
இதன்போது பணிப்பாளரின் சேவையைப் பாராட்டி திணைக்கள அலுவலர்களால் அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)