கிண்ணியா பஸ் டிப்போவை அபிவிருத்தி செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்பு..!
இலங்கை போக்குவரத்து சபைக்கும் போக்குவரத்து அமைச்சுக்கும் ஜனாதிபதிக்கும் கிண்ணியா பஸ் டிப்போவின் குறைகளை 2024/02/01ம் திகதி சுட்டிக்காட்டி இதனை மக்களின் நலன் கருதி அபிவிருத்தி செய்யுமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக …
கிண்ணியா பஸ் டிப்போவை முழு அளவில் அபிவிருத்தி செய்வதாகவும் தனியான எரிபொருள் நிரப்பு நிலையமும் அமைக்கப்படும் என்றும் எழுத்து மூலம் இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
“கிண்ணியா உப பஸ் டிப்போ முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹும் எம். ஈ எச் மகருப் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் கடந்த 1994 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி டி பி விஜேதுங்க அவர்களினால் திறந்து வைக்கப் பட்டது.
தற்போது 30 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளன. எனினும் இன்னும் உப டிப்போ தான். இலங்கையில் இவ்வளவு நீண்ட காலம் உப டிப்போவாக இருக்கும் ஒரே டிப்போ கிண்ணியா தான்.
1994 இல் இருந்து இன்றுவரை ஆளுங்கட்சி பல அரசாங்கங்கள் வந்ததும் இன்னும் தர்மா உயர்த்தப்பட வில்லை இதனால் 90000ம் மக்கள் பல் வேறு போக்குவரத்து பிரச்சினைகளை நாளாந்தம் எதிர் கொண்டு வருகின்றனர். எனவே இதனை தரம் உயர்த்தி மக்களுக்கான இலகுவான போக்கு வரத்தை சீர் செய்து தருமாறு மிகவும் தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றேன்.
முன்னால் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் / தேசமானி
பைசர் இஸ்மாயில்”