முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவு வழங்கும்.- Expo 2024 நிகழ்வில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர்.
முனேற்றத்தை நோக்கிய பயணத்தில் இலங்கைக்கு பாகிஸ்தான் அதன் உறுதியான ஆதரவை எப்போதும் வழங்குமென பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பாஹீம் உல் அஸீஸ் தெரிவித்தார். Expo -2024 கல்வி கண்காட்சியின் இறுதி நாளான நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், பாகிஸ்தானின் உயர் கல்வி ஆணைக்குழுவுடன் (HEC) இணைந்து, மே மாதம் 8 முதல் 15 வரை கல்வி கண்காட்சி 2024 சம்பந்தமான கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளை இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்திருந்தது
அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி ஆகிய மட்டங்களில் பூரண மற்றும் பகுதியளவு நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில்களை வழங்குகிறது.
EXPO-2024 கல்வி கண்காட்சியின் இறுதி தினம் 15 மே 2024 அன்று கொழும்பு பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஏனைய இலங்கை பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பாஹீம் உல் அஸீஸ், ”கல்வித் துறையில் பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் இடையிலான சிறந்த இருதரப்பு உறவுகளின் விளக்கப்படுத்தினார். மேலும், இரு சகோதர நாடுகளுக்குமிடையிலான மக்கள் தொடர்புகளை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தில் வருகை தந்த பாகிஸ்தானிய தூதுக்குழுவின் முயற்சிகளை உயர்ஸ்தானிகர் பாராட்டினார். முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் இலங்கைக்கு பாகிஸ்தானின் உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.