பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட சந்தீப் லாமிச்சானே நிரபராதி என தீர்பளித்தது உயர்நீதிமன்றம்.
நேபாள கிரிகெட் அணியின் முன்னாள் அணி தலைவர் சந்தீப் லாமிச்சானே பாலியல் குற்றச்சாட்டில் குற்றவாளி என காத்மண்டு நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில்இ அவரின் மேன்முறையீட்டை விசாரித்ததன் அடிப்படையில் நேபாள உயர்நீதிமன்றம் குற்றம் அற்றவர் என தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்துள்ளது.
23வயதேயான சந்தீப் லாமிச்சானே மீது கடந்த 2023ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இவர் 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது, சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் கிரிக்கெட் பேரவையும் அவருக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில், சந்தீப் லாமிச்சானே வழக்கு காத்மாண்டு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.
தீர்ப்பு வெளிவந்த தினத்தன்று நேபாள புரோ கிளப் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடினார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. சுமார் ஒரு வருட காலம் இந்த வழக்கு விவாதிக்கபட்டாலும் தற்போது நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து அனைவரும் இது தொடர்பில் தங்களின் அபிப்பிராயங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், கடந்த சர்வதேச தொடர்களில் கூட, இவரின் செயலால் அதிருப்தியில் இருந்த ஸ்கொட்லாந்து அணி வீரர்கள் அவருடன் கை குலுக்குவதை கூட தவிர்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள ஆடவர் ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேபாள அணியின் சார்பில் சந்தீப் லாமிச்சானேவும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.