சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக லாரன்ஸ் வோங் பதவியேற்றார்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக லாரன்ஸ் வோங் நேற்று புதன்கிழமை (15) பதவியேற்றார் இது 20 ஆண்டுகளில் சிங்கப்பூரில் நடந்த முதல் பிரதமர் மாற்றத்தைக் குறிக்கிறது.
51 வயதான லாரன்ஸ் வோங், 1965 இல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் சிங்கப்பூர் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்தானாவில் அவரும் அவரது அமைச்சரவையும் பதவியேற்ற பிறகு பேசிய லாரன்ஸ் வோங், தனது கட்சி ‘எங்கள் சொந்த வழியில்’ மற்றும் முந்தைய தலைமுறையினரிடமிருந்து வேறுபட்ட பாணியில் வழிநடத்தும் என்றார். மூத்த அமைச்சராக அமைச்சரவையில் நீடிக்கவுள்ள தனது முன்னோடியான லீ சியென் லூங்கிற்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.
‘நாங்கள் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம், லாரன்ஸ் வோங் கூறினார். லாரன்ஸ் வோங் திங்களன்று அமைச்சரவையில் சிறிய மாற்றங்களைச் செய்தார், தனது நிதித் துறையைத் தக்க வைத்துக் கொண்டார் மற்றும் அனுபவமிக்க அரசியல்வாதி கான் கிம் யோங்கை துணைப் பிரதமராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.