உள்நாடு

உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பத்தை கற்போருக்கு ஜனாதிபதி நிதிய புலமைப் பரிசில்.

2022 (2023) ஆம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சைக்கு தோற்றி தற்போது க.பொ.த. உயர்தரம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவ மாணவிகளுக்கு இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் சனாதிபதி நிதியம் ஆகியவை ஒன்றிணைந்து வழங்கும் புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் 2024 2025 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வித் தரத்தை மேம்படுத்தும் முகமாக உயர்தரத்துக்கு தெரிவாகி தகவல் தொழில்நுட்ப பாடங்களைக் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கமைய இலங்கை தொலைத் தொடர்பாடல் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பினூடாக, ஜனாதிபதி நிதியம் வழங்கும் இப்புலமைப்பரிசில் வேலைத்திட்டத்துக்கு தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களையும் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, இலங்கையின் கல்வித்துறை மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு க.பொ.த. சாதாரணதரத்தில் சித்தி பெற்று தற்போது க.பொ.த. உயர்தரத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாகக் கொண்டு கற்கும் மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியதிதிலிருந்து புலமைப்பரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமானது க.பொ.த. உயர்தரத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பாடமாகக் கொண்டு கற்கும் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையவுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பிவைக்க வேண்டும்.

தகைமைகள் :-

  • விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் 100,000 ரூபாவுக்கும் மேற்படாதிருத்தல் வேண்டும்.
  • அரசாங்க பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன்/மாணவியாக இருத்தல் வேண்டும்.
  • 2022(2023) ஆம்ஆண்டு நடத்தப்பட்ட க.பொ.த. (சா.த) பரீட்சைக்கு தோற்றி
  • க.பொ.த. (உ.த.) கற்பதற்கான முழுத் தகைமைகளையும் பெற்று க.பொ.த (உ.த.)
  • கற்பதற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவன்/மாணவியாக இருத்தல்.
  • விண்ணப்பத்தை பின்வரும் முகவரியில் அமைந்துள்ள சனாதிபதி நிதியத்திக்கு பதிவுத்தபால் மூலம் மாத்திரம் அனுப்புதல் வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :-

செயலாளர், சனாதிபதி நிதியம், இல. 35, மூன்றாம்மாடி, லேக்ஹவுஸ் கட்டிடம், டீ. ஆர். விஜேவர்தன மாவத்தை, கொழும்பு – 10.

இவ்விடயத்தில் அசட்டையாக இருக்காது தகுதிபெற்ற அனைவரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். பொருளாதார ரீதியில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி யிருக்கும் மலையக மாணவர்கள் இவ்விடயத்தில் அதிக அக்கறை காட்டல் வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை கல்வி இராஜாங்க அமைச்சரின் பதுளை,பண்டாரவளை, பசறை, மடுல்சீமை, லுணுகலை, எல்ல, அப்புத்தளை, உடப்புஸ்சல்லாவை ஆகிய காரியாலயங்களில் பெற்றுக் கொள்ள முடியும். அதேவேளை விண்ணப்பப் படிவங்களை கீழ்க்கண்ட இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.

https://teachmore1.lk/presidential-scholarships-to- gce-a-l-ict-students-2024-2025

இத்திட்டத்தின் கீழ் சகலபாடசாலை அதிபர்கள் தங்களது பாடசாலையில் கற்கும் தகுதியுடைய மாணவர்களை, விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *