ஊடகவியலாளர் இக்பால் அலியின் இரு நூல்கள் வெளியீடு.
அக்குறணை ஐடெக் கல்வி நிலையம்இ மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் இணைந்து நடத்தும் எழுத்தாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் கவிஞர் இக்பால் அலி எழுதிய காலத்தின் கால்கள் (திறன்நோக்கு கட்டுரைத்தொகுதி), குரங்குத் தம்பி (சிறுவர் பாடல்கள் ) ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா 23-05-2024 காலை 9.30 அக்குறணை ஐடெக் கல்வி நிலைய மண்டபம் (தெலும்புகஹவத்த வீதிஇ பாலிகா பாடசாலைக்கு அருகில்) ஐடெக் கல்வி நிலையகத்தின் இயக்குனர் ஐ. ஐனுடீன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
முதன்மை விருந்தினர்களாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் எம். எச். ஏ. ஹலீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக தினகரன் வாரமஞ்சரி, தினகரக் நாளிதழ் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தி. செந்தில் வேலவர், இலங்கை ஒலிபரப்புக் சுட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையின் ஆலோசனை சபை உறுப்பினர், பாக்கிஸ்தான் நாட்டின் வதிவிடப் பிரதிநிதி அப்சல் மரைக்கார், ஜம்மிய்யதுல் அன்னசாரிஸ் சுன்னத்துல் முஹம்மதிய்யா பொதுச் செயலாளர், ஏ. எல் கலிலுர்ரஹ்மான் (எம். ஏ) , அக்குறணை பிரதேச செயலாளர் ருவன்திகா குமாரி ஹென்நாயக ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
நூல் முதல் சிறப்புப் பிரதிகளைப் பெற்று எழுத்துலகிற்கு பங்களிப்புச் செய்யும் பெருந்தகைகள் தொழிலதிபர் அல்ஹாஜ் டி. எம். எஸ். நிஸைஹிர் ஹாஜியார், தொழிலதிபர் தேசமான்ய எஸ். முத்தையா, அக்குறணை ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்ஹ் எம்.ஏ.எம். சியாம் , மலையக கலை கலாசார (இரத்தின தீப) சங்கத்தின் தலைவர் தேசமான்ய எஸ். பரமேஸ்வரன் ஆகியோர் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் இரா. அ. இராமன் வரவேற்புரையினையும், மத்திய மாகாண முன்னாள் முதல் அமைச்சர், வட மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, மனித அபிவிருத்தி தாபன இயக்குனர், சர்வதேச விவசாய நிறுவனத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம், சமயஇ சமூகப் பேச்சாளர், நெலும் ஆடைக் காட்சியகத்தின் உரிமையாளர் தேசமானிய முத்தையாப்பிள்ளை ஸ்ரீகாந்தன் ஆகியோர் வாழ்த்துரையாற்றவுள்ளனர்.
பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ் நூல்கள் பற்றிய அறிமுகத்தையும், பேராதனை பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை முன்னாள் விரிவுரையாளர் கவிஞர் ரா. நித்தியானந்தன் மற்றும் கண்டி திரித்துவக் கல்லூரி சிரேஷ்ட ஆசிரியை திருமதி சர்மிளாதேவி துரைசிங்கம் ஆகிய இருவரும் நூல் நயவுரையினையும், நூலாசிரியர் இக்பால் அலி ஏற்புரையினையும், அக்குறணை பிரதேச செயலகத்தின் மொழிபெயர்ப்பாளர் பீ. தாரீக் நன்றியுரையினையும் நிகழ்த்தவுள்ளனர்.