உள்நாடு

முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸின் புனித ஹஜ் யாத்திரிகர்களுக்கான கருத்தரங்கும், ஹாஜிகளின் தோழன் புத்தக வெளியீடும்..!

2024 ஆண்டில் முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸின் ஊடாக புனித ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கான கருத்தரங்கும் ஹாஜிகளை வழிகாட்டக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள ஹாஜிகளின் தோழன் என்ற புத்தகத்தின் மீள் வெளியீட்டு நிகழ்வும் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் மௌலவி எம்.எஸ்.எம். சுஹூர்தீன் தலைமையில் 2024.05.13 ஆம் திகதி இடம்பெற்றது.

முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸின் நிறைவேற்று பணிப்பாளர் அல் ஹஜ் எம்.எஸ்.எப்.ஆர். முகத்தஸி அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மௌலவி எஸ்.எல். பரீட், மௌலவி சஹ்றான், மௌலவி ரயீஸ் முப்தி மற்றும் மௌலவி சபா மொகமட் அல் நஜாஹி முகத்தமுல் காதிரியி ஆகியோரும் மார்க்க சொற்பொழிவாற்றினர்.

ஹாஜிகளின் தோழன் புத்தகம் தொடர்பில் முன்னாள் கணக்காளர் ஐ.எல்.எம்.பாறூக் அவர்கள் உரையாற்றினார் அதேவேளை நூல்களின் பிரதிகளை அதிதிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வின்போது சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்களுடன் உலமாக்கள் நலன்விரும்பிகள் ஹாஜிகள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.

(நூருல் ஹுதா உமர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *