விளையாட்டு

தங்கம் உட்பட 3 பதக்கங்களை வெற்றி கொண்டு அசத்தினார் ஹிமாஸ் பஸ்லின்.

துபாயில் இடம்பெற்ற நீச்சல் போட்டியில் மூன்று பிரிவுகளில் தங்கம் மற்றும் 2 வெண்கலம் அடங்களாக 3 பதக்கங்களை வெற்றி கொண்டு அசத்தினார் மாத்தறையைச் சேர்ந்த ஹிமாஸ் பஸ்லின்.

கடந்த 12ஆம் திகதி துபாய் ஹம்டன் விளையாட்டு அரங்கில் நீச்சல் தடாகத்தில் இடம்பெற்ற நீச்சல் போட்டியில் இலங்கையினைப் பிரதிநிதித்துவம் செய்து APPIT உயர்கல்வி நிறுவனத்தில் சட்டக்கல்வியை பயின்று வரும் ஹிமாஸ் பஸ்லின் 3 பிரிவுகளில் பங்கேற்றிருந்தார். இதில் Breast Stroke பிரிவில் தங்கப்பதக்கத்தை வெற்றி கொண்டு அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற Back Stroke பிரிவில் வெண்கலப்பதக்கத்தை வெற்றி கொண்டதுடன் Free Style பிரிவில் மற்றுமொரு வெண்கலப்பதக்கத்தையும் தனதாக்கியிருந்தார். இதற்கமைய ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலப்பதக்கத்தை வெற்றி கொண்டு தன் ஊருக்கும், தன் நாட்டிற்கும் பெருமை சேர்த்து அசத்தினார் ஹிமாஸ் பஸ்லின்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *