மல்லத்த அஸ்கிய மாநாகய தேரர்கள் வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட்டிற்கு புகழாம்.
வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் இன நல்லிணக்கத்திற்கு சேவையாற்றியக் கூடியவர் என மகிழ்ச்சி கொள்வதோடு ஆளுநரின் கருத்துக்களின் ஊடாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் நாயக தேரர்கள் தேரர்கள் தெரிவிப்பு.
இன்று வடமேல் மாகாண ஆளுநர் கௌரவ நஸீர் அஹமட் மல்வத்து கட்சி அனுநாயக்க விக்ரமாராச்சி ஆயுர்வேத பல்கலைக்கழக வேந்தர் அதி வணக்கத்திற்குரிய நியங்கொட விஜிதசிறி அனுநாயக தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
இதன்போது, பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்ததுடன், ஆளுநர் நஸீர் அஹ்மட் தேசிய ஒருமைப்பாட்டிற்கு ; அளப்பரிய சேவையாற்ற முடியும் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் எனவும், உங்களின் கருத்துக்களால் இதனைச் செய்ய முடியும் எனத் தோன்றுவதாகவும் மாநாக தேரர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
அதேவேளையில் ஆளுநர் நஸீர் அஹமட் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட போது வடமேல் மாகாணத்தில் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை விரைவாக பூர்த்தி செய்து வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதாகவும், பாடசாலைகள் மற்றும் குடும்பங்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
சுற்றுலா வர்த்தகத் துறையானது தற்போது இரண்டு வீதமாக உள்ளதாகவும் அதனை மேம்படுத்தும் வகையில் பல விசேட வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பின் ஊடாக வடமேல் பிராந்தியத்தின் சுற்றுலா வர்த்தகம் அபிவிருத்தியடைந்து வடமேல் பிராந்தியத்தின் பொருளாதாரம் மேலும் விருத்தியடைந்து வருவதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
(இக்பால் அலி)