நீர்கொழும்பு வைத்தியசாலையின் பல்வேறு குறைபாடுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
மூச்சுத் திட்டத்தின் கீழ் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு Bubble CPAP machine இயந்திரமொன்றை குறைமாத குழந்தை பிரிவுக்கு நன்கொடையாக வழங்கி வைக்கச் சென்ற போது, CT Scan இயந்திரமொன்றின் தேவைப்பாடு நிலவுவதை தெரிந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(14) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சத்திர சிகிச்சைகளுக்கான வசதிகள் இன்மையால் அவைகளும் தாமதமாகி வருவதால், இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.