உள்நாடு

கொள்ளுப்பிட்டியில் பலஸ்தீன் ஆதரவு ஆர்ப்பாட்டம்: சஜித் உட்பட பெருந்தொகையானோர் பங்கேற்பு..!

இஸ்ரேலிய படைகள் காஸாவில் பலஸ்தீன் மக்கள் மீது நடாத்தி வரும் கொடூர தாக்குதல்களைக் கண்டித்தும் அந்த மக்களுக்கு நீதி வேண்டியும் நேற்று மாலை கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்று வட்டத்தில் மாபெரும் பலஸ்தீன் ஆதரவு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான்,எஸ்.எம்.மரிக்கார் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்களும் பெருந்தொகையான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பலஸ்தீன் மக்களுக்கான தனது ஆதரவை வெளிக்காட்டினார்.

 

(அஷ்ரப் ஏ சமத்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *