கட்டுரை

ஒரே ஒருமுறை தோற்றுப் பாருங்கள்.

வாழ்க்கையில் எப்போதாவது, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது ஒரு போட்டியில் தோல்வியை தழுவிய நினைவுகள் உண்டா….?? வெற்றி மட்டும் தான் வாழ்க்கையா..? இல்லை. இல்லவே இல்லை. ஒரே ஒருமுறை தோல்வியை சந்தித்துப் பாருங்கள். நீங்கள் யார்.., என்பதை உங்களுக்கே நன்றாக தெரியும்.
கோபம் , விரக்தி என்பன கோரத்தாண்டவம் ஆடுமா..? இல்லை, பொறுமையும் புன்னகையும் தவழுமா..? முதல் தெரிவு எனின், நீங்கள் தோல்வியைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை. இரண்டாவது தெரிவு எனின், தோல்வியின் மூலம் நீங்கள் ஏதோ கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்…

சரி., இனி தோல்வியைப் பற்றி சிறிது கற்றுக் கொள்வோமா..? எல்லாம் முடிந்து விட்டது. அவ்வளவுதான்… இனியும் நடக்கப்போவது என்ன… ? ஏன் வாழ்கிறோம்…? என்ற பல விதமான வசனங்களை கேட்டு இருப்போம்.

உண்மையில், எதிர்மறையான வாசகங்களே…

தோல்வி என்பது, எல்லாம் முடிந்து விட்டது என்று நினைப்பதல்ல. அதுவே ஆரம்பம். அது ஒரு பகுதி. வெற்றிக்கான அடித்தளம்.வெற்றியைப் பற்றி பிடிக்கும் ஆதாரமாக தோல்வி இருந்து கொண்டிருக்கின்றது. நாம் தோல்வியை தழுவியதன் மூலமாகத்தான் வெற்றிக்குரிய அடையாளங்களை எமக்கு கண்டுகொள்ள முடியும். அதன் நுணுக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும். அனுபவங்களை கற்றுக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு முறையும் வெற்றிகளை அடுக்கிக் கொண்டே போனால் வாழ்வில் சுவாரஷ்யம் இருக்காது. தோல்வியை தழுவி , அதன் மூலம் கற்று , தன்னம்பிக்கை வளர்த்து , முன்னேறி , போராடி வெற்றியை பெற்றோமாயின் நிச்சயம் எம் வாழ்வு ஜெயிக்கும்.

என்ன ….
ஒரு முறை தோற்றுப் பார்ப்போமா…!!?

 

(பயாஸா பாஸில்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *