உகண்டாவிடம் வீழ்ந்தது இலங்கை இராணுவம்.
சுற்றுலா உகண்டா கிரிக்கெட் அணிக்கும், இலங்கை இராணுவ அணிக்கும் இடையிலான உத்தியோகபூர்வமற்ற ரி20 போட்டியில் உகண்டா அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
9ஆவது ரி20 உலகக்கிண்ண தொடருக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ள உகண்டா அணி அதற்கான பயிற்சி போட்டிகளில் இலங்கையில் பங்கேற்று வருகின்றது. அதற்கமைய இலங்கை இராணுவ கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டி கடந்த 11ஆம் திகதி பானகொடவில் இடம்பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி இலங்கை இராணுவ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் மதுஷ்க 28 , திசார பெரேரா மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் தலா 26 பெற்றனர். பந்துவீச்சில் நக்ரானி மற்றும் மியாஜி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள்களை வீழ்த்தினர்.
பின்னர் பதிலளித்த உகண்டா அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 126 ஓட்டங்களை பெற்று 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆர். ஏ. ஷாஹ் 36 ஓட்டக்களையும், ரம்ஜானி 27 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் தேனுரத்தன் 3 விக்கெட்டுகளையும் , சீகுகே பிரசன்ன 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
(அரபாத் பஹர்தீன்)