உள்நாடு

தேவஹூவ கிராமத்தின் முதலாவது சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்..!

உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்தார் தேவஹூவ கிராமத்தின் முதலாவது சட்டத்தரணி திருமதி நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்ரா.

இவர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக உயர் நீதிமன்றத்தில் 2024.05.06ம் திகதி திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.இவர் தனது கல்வியினை தேவஹூவ முஸ்லீம் மகா வித்தியாலத்தில் பயின்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவாகினார். இவர் அங்கு ஆங்கில மொழி மூலத்தில் முகாமைத்துவமும் தகவல்தொழிநுட்பப் பிரிவில் விஞ்ஞானமாணி (BSE IN MIT) பட்டத்தை பெற்றுக்கொண்டார்.மேலும் ஆங்கிலமொழி மூலத்தில் சிறப்புசித்தி பெற்று சிறப்புச் சட்டமாணிப் பட்டத்தையும் [LLB(Hons)] பெற்றுக்கொண்டார்.

சட்டக் கல்லூரியினால் நடாத்தப்படும் சட்டத்தரணிகளுக்கான இறுதிப் பரீட்சையிலும் தோற்றி சித்தியடைந்துள்ள இவர் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.மிகக் குறைந்த வயதில் சட்டத்தரணியான இவர் தேவஹூவ கிராமத்தின் நிஸ்வர்தீன் நிஸ்பா தம்பதிகளின் மூன்றாவது புதல்வியுமாவார்.

இவரின் மூத்த சகோதரிகளான திருமதி நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்கா,திருமதி நிஸ்வர்தீன் பாத்திமா நிஸ்திகா ஆகியோர் ஆசிரியர்களாக தேவஹூவ முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் பணியாற்றுகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *